கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் நலன் கருதி மாட்ட ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் இந்த பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதலாம் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.