அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், அத்தியாவசியமற்ற சேவைகளுக்கான எரிபொருளை தொடர்ந்து வழங்குவதாக LIOC தெரிவித்துள்ளது.

LIOC பொது மேலாளர் மனோஜ் குப்தா, அரசின் கட்டுப்பாடுகள் தங்களுக்குப் பொருந்தாது என்றும், அனைத்து வாகனங்களுக்கும் டோக்கன் முறை மூலம் எரிபொருள் நிலையங்கள் மூலம் எரிபொருள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் நேற்று திடீரென தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.