நடிகர் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை அவரது மாளிகையில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கமல்ஹாசன், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஊடகங்கள் குறித்தும், அடுத்த தலைமுறை அதை எப்படி கையாள்வது என்பதைப் பற்றிய சில விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.