இன்று களுத்துறை மாவட்டத்திலே/வியாங்கல்லைக்கு   ஓர்  ( புஷ்றா/ bushra)

வியாங்கல்லையைச்  சேர்ந்த  ....(எல்லோராலும்  நாளிம் சாப்  என்று அன்பாக  அழைக்கப்படுகின்ற )..

சகோதரர்  நாளிம் அவர்களுடைய  மூன்றாவது  இளைய  மகள்  பாத்திமா  புஷ்றா. 

இவர்களுக்கு பாலர் பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் இருந்தே  நான் ஒரு ( v.o.g) டாக்டராக  ஆக வேண்டும் என்ற ஓர் ஆசை. 

ஆனால் தன்னுடைய  குடும்பமோ  ஆண் சகோதரர்கள் யாருமே இல்லாத ஒரு  சாதாரண  ஏழைக் குடும்பம். 

அவர்களுடைய  தந்தையோ...காலைக் கடயாப்பம்  ( றோல்ஸ்/ அப்பம்) போன்றவைகளைச் செய்து  ..அதைக் கடை கடையாக சென்று விற்று..தன்னுடைய வாழ்க்கையை ஓட்டக் கூடியவர். 

( தனது தந்தையின் கஷ்டங்களை அன்றே உணர்ந்த  சிறுமி புஷ்றா அவர்களும் தன்னுடைய  பாடசாலை செல்லுகின்ற  சிறிய  பருவத்திலே...

தன்னுடைய தந்தைக்கு உதவியாக  சைக்கிள்  மிதித்து  ஊரிலே இருக்கும்  கடைகளுக்குச்  சென்று...இடியப்பம்/ அப்பம் போன்றவைகளை கொடுத்தும்  வந்திருக்கிறார்கள்..என்பதும் ஊரார்கள் அறிந்த  உண்மையே. 

இப்படியே காலங்கள் கழிய...2016 ஆம் ஆண்டு தன்னுடைய  கனவுகளை நனவாக்க.. விடாமுயற்சிகளோடும்....

ரஷ்யாவை/ அண்மித்துள்ள  (belarus) என்ற நாட்டிற்கு  2016 ஆம் ஆண்டு....  தன்னுடைய  வைத்தியப்  படிப்பைத்  தொடருவதற்காக   இலங்கையில் இருந்து  தன்னுடைய  குடும்ப உறவுகள்/ நண்பர்கள்/ ஊர் மக்களுடைய  பிரார்த்தனைகளோடு  பயணமாகின்றார். 

 நம்பிக்கை/ தாய்/ தகப்பனுடைய  இரவு பகல் பாராது  செய்து வரக்கூடிய  கடினமான  உழைப்பின் காரணமாக....

நேற்றைய தினம் தன்னுடைய  ஆறு  வருடப்  படிப்பைப் பூர்த்தி செய்து  (22/06/2022)..belarus நாட்டுப் பல்கலைக்கழகத்திலே  (doctor of medicine (md)  என்கின்ற  பட்டத்தைப் பெற்றிருக்கின்றார்கள். 

( வியாங்கல்லைக்கு  முதலாவது  பெண் வைத்தியர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்)

 வியாங்கல்லையைச்  சேர்ந்த முஹம்மத்  நாளிம்  பாத்திமா  புஷ்றா அவர்களுக்கு  

மனமார்ந்த நன்றிகளையும்/ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.