எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கும் அவற்றின் சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் எரிபொருள் ஆர்டர்களை எடுப்பதைத் தவிர்ப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மேற்கொண்டுள்ள நடவடிக்கையினால், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் ஏராளம்.

 இதுவரை சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இவ்வாறான நிலை நீடித்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.