South land நகர்ப் பகுதியான பிக்டனுக்கு (Picton) தெற்கே மாநில நெடுஞ்சாலை 1ல் இன்று காலை டிரக்கும் வேனும் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் Mount Pleasant என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், ஒன்பது பேருடன் சென்ற வேன் ஒன்றும் குளிரூட்டப்பட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய Tasman மாவட்ட கமாண்டர் இன்ஸ்பெக்டர் பால் பொரெல், வேன் ​​வடக்கு நோக்கி பயணித்தபோது மையக் கோட்டைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்ற டிரக் மீது மோதியதாகத் தெரிகிறது.

விபத்தில் உயிரிழந்த குழந்தை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை என்று அவர் கூறினார்.

காவல்துறையின் கவனம் "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கப்படுவதையும், விபத்தின் சூழ்நிலைகள் முழுமையாக விசாரிக்கப்படுவதையும் உறுதி செய்வதில் உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

லிண்டன்ஸ் சாலை சந்திப்பிற்கு தெற்கே SH1 மூடப்பட்டுள்ளதாகவும், நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் Waka Kotahi கூறுகிறது.