கத்தாரில் தெரு வியாபாரிகள் இறைச்சி கொள்வனவு செய்வோருக்கு ஆரோக்கியம் சார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் தொரு வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் உடல் ஆரோக்கியத்துக்கு கேடானதாக காணப்பட்டதாக பலதிய்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல் ராய்யான் நகராட்சி மையத்திற்குட்பட்ட சய்லிய்யா மத்திய சந்தைப் பகுதியில் இருந்து கிடைக்கப்பட்ட இரகசிய தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து தெரு வியாபாரிகளிடமிருந்து 270 கிலோ இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இறைச்சிகள் கொள்வனவுக்கு உகந்தவையாக காணப்படவில்லை என்பதோடு, இது போன்ற வியாபார நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 270 கிலோ இறைச்சியும் அழிக்கப்பட்டதோடு, தெரு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் என்பதாக நகராட்சி மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.