பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் வரவிருக்கும் நேட்டோ தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் நேட்டோ தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ள முதல் நியூசிலாந்து தலைவர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் தலைவர்களை ஜூன் 28 முதல் 30 ஆம் திகதி வரை ஸ்பெயினில் நடைபெறும் இராணுவக் கூட்டணியின் சந்திப்பில் கலந்து கொள்ள 
நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே அந்தோனி அல்பானீஸ், ஃபுமியோ கிஷிடா மற்றும் யூன் சுக்-யோல் ஆகியோர் ஏற்கனவே அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பிரதமர் ஆர்டெர்ன் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட அமர்வில் பங்கேற்பார் மற்றும் பல வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவு மந்திரி நனையா மஹுதா உட்பட அமைச்சர்கள் முந்தைய நேட்டோ கூட்டங்களில் கலந்து கொண்டாலும், தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு நியூசிலாந்து அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.