Bay of Plenty இன் நகர் பகுதியான Tauranga வில் இன்று அதிகாலை 1 மணியளவில் ரெயின்போ யூத் மற்றும் ஜெண்டர் டைனமிக்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக பொலிஸார் கருதுகின்றனர்.

இந்த கட்டிடம் 17வது அவென்யூவில் உள்ள Tauranga வின் வரலாற்று கிராமத்தில் உள்ளது, மேலும் இது ரெயின்போ யூத் மற்றும் ஜெண்டர் டைனமிக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது .

இது வெஸ்டர்ன் Bay of Plenty இன் திருநங்கைகள் மற்றும் பாலின வேறுபட்ட சமூகங்களின் குறிப்பிட்ட மனநலம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மருத்துவ மற்றும் சமூக அமைப்பாகும்.

இந்த கட்டிடம் தற்போது தீ விபத்தால் எரிந்து சேதமடைந்த நிலையில் தீயணைப்பு மற்றும் அவசரநிலையுடன் இணைந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தீ விபத்தின் போது கட்டிடத்தில் யாரும் இருக்கவில்லை என்று Inclusive Aotearoa Collective Tāhono இணைத் தலைவர் Anjum Rahman தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தீ விபத்தைத் தொடர்ந்து ரெயின்போ இளைஞர் குழு உறுப்பினர் ஷனில் லால் இன்று காலை கூட்ட நிதி பிரச்சாரத்தை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.