நடிகை காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிச்லு இருவரும் 2020 அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

அதன் பிறகு இந்த வருடத்தின் தொடக்கத்தில் காஜல் தான் கர்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி காஜல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மகனுக்கு நீல் கிச்லு என பெயர் சூட்டி இருப்பதாகவும் பின்னர் அறிவித்தனர்.

குழந்தை பிறந்ததை அறிவித்த நடிகை காஜல் அகர்வால் குழந்தையின் புகைப்படத்தை  வெளியிடாமல் இருந்தார்.

மேலும் காஜல் வெளியிட்ட புகைப்படத்தில் குழந்தையின் முகத்தை மறைந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது காஜல் தனது மகன் முகம் தெரியும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.