இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என அனுதினமும் வீடியோக்கள் வெளியாவதோடு வைரலும் ஆகிறது. இதில் பிரபலங்களின்  வீடியோக்களும் அடக்கம்.

இந்நிலையில் ரெஸ்லிங் வீரரும், நடிகருமான ராக் தூங்கிக் கொண்டிருக்கும் போது முகத்தில் யாரோ மீசை வரைந்து குறும்பு செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அது வேறு யாருமில்லை. அவருடைய குழந்தைகள் தான்

ராக் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவரது குழந்தைகள் அவரது முகத்தில் பென்சிலை கொண்டு தாடி, மீசை வரைந்து விட்டனர். உறக்கத்திற்கு பிறகு எழுந்த ராக் முகத்தை கண்ணாடியில் பார்க்க, முகத்தில் வரைந்திருந்த மீசை வரைந்திருந்தது தெரியவந்தது.

தற்பொழுது இந்த காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.