1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்த இயக்குனர்.

இந்நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சத்தியராஜுடன் விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் இத்திரைப்படம் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது உள்ளது. 

இதனை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளிவரவுள்ளது

இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.