தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துப் பிரபலமடைந்தவர் நடிகர்  சோனு சூட்.

கொவிட் ஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்தார்.

இதனால் இந்தியா முழுவதும் அவருக்குப் பாராட்டு குவிந்தது. அதன் பிறகு இந்தியாவின் பிரபலமான நபராக மாறிப்போன சோனு சூட் தொடர்ந்து ஏழை எளியோருக்கு உதவிகளைச் செய்து வருகிறார். 

இந்நிலையில் பிறக்கும் போதே 4 கால்கள் மற்றும் 4 கைகளுடன் பிறந்து பெரும் அவதிப்பட்டு வந்த பீகாரைச் சேர்ந்த சௌமுகி குமாரி என்ற சிறுமிக்கு சோனு சூட்டின் உதவி மூலம் குஜராத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையில் அச்சிறுமியின் தேவையற்ற 2 கால்கள் மற்றும் 2 கைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு முன், பின் என சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து, 7 மணி நேரமாக நடைபெற்று வந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது எனத் தெரிவித்துள்ளார் சோனு.

இதனைத் தொடர்ந்து சோனு சூட்டின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.