கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேசிய மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

கொவிட் வைரஸை ஒழிப்பதற்காக செயற்படும் சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதன் கீழ் 37 ஆயிரத்து 825 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்திருக்கின்றது. நேற்று 32 ஆயிரத்து 539 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.