Kiribati என்பது மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும்.

இந்நிலையில் Kiribati இல் இருந்து காணாமல் போன இரண்டு படகுகள் ராயல் நியூசிலாந்து விமானப்படையின் P-3K2 ஓரியன் விமானத்தின் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Makin தீவில் இருந்து Kiribati இல் உள்ள Butaritari தீவுக்கு பயணம் செய்ததாகக் கூறப்படும் மஞ்சள் நிற மரப் படகு காணமல் போன நிலையில் அதனை தேட NZ மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் உதவி கோரப்பட்டதாக நியூசிலாந்து பாதுகாப்புப் படை ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.  .

இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் 11 வயது குழந்தையுடன் குறித்த படகு கடந்த வெள்ளிக்கிழமை Makin தீவில் இருந்து புறப்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்க கடலோர காவல்படை கடந்த வார இறுதியில் Kiribati இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட வூட்ஹவன் III என்ற படகை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஓரியன் விமானம் திங்கட்கிழமை அதிகாலை Makin தீவின் அருகே தேடுதல் பணியில் ஈடுபட்ட போது வூட்ஹவன் III ஐ கண்டுபிடித்தது.

படகு காணாமல் போனதாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 150 கடல் மைல் தொலைவில் அது காணப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மக்கின் தீவில் இருந்து மஞ்சள் நிற படகையும் குழுவினர் கண்டுபிடித்தனர்.

இரண்டு படகுகளிலும் இருந்தவர்கள் ஆரோக்கியத்துடன் காணப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.