நியூசிலாந்தர்கள் தங்கள் தடுப்பூசி பாஸ்களை இன்று முதல் அப்டேட் செய்து கொள்ளலாம்‌.

தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து பாஸ்களும் ஜூன் 1ம் திகதி காலாவதியாகிவிடும்.

இந்நிலையில் இன்று முதல் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் புதிய பாஸைப் பதிவிறக்கம் செய்யலாம்.

5 முதல் 11 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி பாஸ் தேவையில்லை.

புதிய பாஸ்கள் சற்று வித்தியாசமாக இருக்கும் மற்றும் சில வடிவமைப்பு புதுப்பிப்புகளுடன் இருக்கும், இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

0800 28 29 26 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது தடுப்பூசி தளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ புதிய பாஸ்களை உங்களுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ My Covid Record மூலம் கோரலாம் என கூறப்படுகிறது.