ஆக்லாந்து புறநகர் பகுதியான Orewa வில் இன்று பிற்பகல் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

Cammish Lane இல் பிற்பகல் 2.08 மணியளவில் கார் ஒன்று மற்ற இரண்டு வாகனங்கள் மற்றும் கட்டிடம் ஒன்றின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

தீவிர விபத்து பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சாலை மூடப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.