திங்கட்கிழமை (23)  ஆரம்பமாகவிருக்கும் க .பொ.த சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் முகத்தை மூடி பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சில பிரதேசங்களில் பர்தாவை அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சில அதிகாரிகள் தெரிவித்திருப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ. எச் எம் . பௌசி - கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் மண்டபத்துக்கு பிரவேசிக்க முன் தலையை மறைத்திருப்பவர்கள் தமது இரு காதுகளையும் திறந்து காட்ட வேண்டும், என்பதும் ,முகத்தை திறந்தே பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்றும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பர்தாவை அகற்றி விட்டே பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் என வடக்கிலிருந்து சில பெற்றோர் முஸ்லிம் கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, முஸ்லிம் கவுன்சில் முஸ்லிம் அரசியல் தலைமைதுவத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.