ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல், கடை தீவைப்பு மற்றும்  ஆடைத்தொழிற்சாலையை உடைத்து சேதப்படுத்திய  சம்பவம் தொடர்பாக  மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினரால் நேற்று சனிக்கிழமை (21) 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு
ள்ள நிலையில் இவர்களை எதிர்வரும் 25 ம்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த (10) ம்திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம் வீடு அவரது உறவினாரின் வீடு ஹோட்டல் கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் நேற்று சனிக்கிழமை ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயது சிறுவன் உட்பட 15 பேரை கைதுசெய்தனர்

இதில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சிறுவனை ஏறாவூர் சுற்றுவா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் க.பொ.தர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள  பரீட்சை நிலையத்துக்கு கொண்டு சென்று பரீட்சை எழுத அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதேவேளை இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக  ஹோட்டல் கடையில் இருந்து  கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் 14 பேரை கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக  இதுரை 15 பேரை கைது செய்துள்ளதாகவும் இதனுடன்  தொடர்புபட்ட பலர் தலை மறைவாகியுள்ளதாகவும் இதில் ஒருவர் நேற்றைய தினம்  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள ஏனையவர்களை  கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்