இன்று நியூசிலாந்தில்  4990 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆக்லாந்தில் 1693 பேரும், நோர்த்லேண்டில் 140 பேரும், வைகாடோவில் 353 பேரும், Bay of Plenty இல் 165 பேரும், Lakes இல் 88 பேரும், Hawke's Bay இல் 166 பேரும், Mid Central இல் 182 பேரும், Whanganui இல் 62 பேரும், Taranaki இல் 137 பேரும், Tairawhiti இல் 27 பேரும், Wairarapa வில் 58 பேரும், Capital and Coast இல் 351 பேரும், Hutt Valley வில் 134 பேரும், Nelson Marlborough வில் 165 பேரும், Canterbury இல் 799 பேரும், South Canterbury இல் 84 பேரும், தெற்கில் 344, West coast இல் 36 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 09 பேர் உட்பட 379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 1,094,659 ஆகும்.