கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (21) நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ் நீர் விநியோக முறையின் அத்தியாவசிய நவீனமயமாக்கலே இதற்குக் காரணம்.

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி இன்று இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

மேலும், கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதால் நீர் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரி யங்களுக்கு வருந்துவதாகவும், தேவையான நீரை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொள்கின்றது.