"திட்டமிடப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை" கண்காணித்து வருவதாக பொலிஸார் கூறுவதால், இன்று ஆக்லாந்து துறைமுக பாலத்தில் தெற்கு நோக்கிய இரண்டு பாதைகள் மூடப்பட்டன.

SH1 இல் தெற்கு நோக்கிய பாதைகள் பிற்பகல் 1.20 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக Waka Kotahi தெரிவித்துள்ளது, ஆனால் North Shore இல் இருந்து பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையில், சென்ட்ரல் ஆக்லாந்து பகுதியில் திட்டமிடப்பட்ட போராட்டம் குறித்து அறிந்திருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலத்தில் பாதசாரிகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், ஹார்பர் பாலத்தின் மீது செல்லத் திட்டமிடும் வாகன ஓட்டுநர்கள் தாமதத்தை எதிர்பார்க்கவும், பொறுமையாக இருக்கவும்  நினைவூட்ட விரும்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் மூன்று நீர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் hīkoi அமைப்பாளர்கள் சனிக்கிழமை துறைமுகப் பாலத்தைக் கடக்கத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, எதிர்ப்பு நடவடிக்கையின் விளைவாக Onewa வில் வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் பாதைகள் மூடப்பட்டன.

மதியம் 12.30 மணியளவில் அவை மீண்டும் திறக்கப்பட்டன.