Kāpiti Coast மற்றும் Hawke's Bay ஆகிய இடங்களில் ஏற்பட்ட இரு வெவ்வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்
 
Kāpiti Coast இல் உள்ள Ōtaki என்ற இடத்தில் ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

நள்ளிரவு 1 மணிக்குப் பிறகு Convent சாலையில் இடம்பெற்ற குறித்த விபத்திற்கு அவசர சேவைகள் வரழைக்கப்பட்டன.

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் தற்போது மிதமான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீவிர விபத்து பிரிவு பொலிஸார் இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நேப்பியர் புறநகர் பகுதியான Meeanee இல் இன்று அதிகாலை வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

அதிகாலை 4.30 மணியளவில் Willowbank சாலையில் உள்ள கம்பத்தில் கார் மோதியதாகவும், பலியானவர் வாகனத்தில் இருந்த ஒரே நபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.