சவுத்லேண்ட் மருத்துவமனையில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மருத்துவமனையின் மூன்று நோயாளர் பிரிவுகள் பார்வையாளர்கள் பிரவேசிக்காத வண்ணம் மூடப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவமனையில் தற்போது 19 கொவிட் தொற்றாளர் உள்ளனர்.

இந்நிலையில் ஏனைய நோயாளிகளைப் பாதுகாக்க மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வார்டுகளுக்கு வருகை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்ட சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் கருணை அடிப்படையில் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் முதலில் நோயாளர் பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், அறுவைசிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ள எவரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக தங்கள் அறுவை சிகிச்சைக் குழுவைத் தொடர்பு கொள்ளுமாறு தெற்கு DHB கேட்டுக்கொள்கிறது.

அறுவை சிகிச்சையின் போது கொவிட்-19 தொற்று நிமோனியா போன்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக DHB கூறுகிறது.