North Island இன் Horowhenua மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நகரமான Levin ஐ சூறாவளி தாக்கியதை அடுத்து நிவாரண நிதியாக அரசாங்கம் 100,000 டொலர்களை அறிவித்துள்ளது.

இன்று காலை Horowhenua நகரத்தில் ஒரு சிறிய சூறாவளி வீசியதை அடுத்து வீடுகளில் கூரைகள் தூக்கி எறியப்பட்டன, மரங்கள், மின் இணைப்புகள் மற்றும் காய்கறி பயிர்கள் சேதமடைந்தன.

இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசியது.

மேலும் 30 முதல் 50 வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில், அவசரகால மேலாண்மை அமைச்சர் கிரி ஆலன், அரசாங்கம் 100,000 டொலர்கள் நிவாரண நிதியை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், தண்ணீர் தொட்டிகளை நிரப்புதல் மற்றும் சேதமடைந்த எல்லை வேலிகளை மீண்டும் அமைத்தல் போன்ற சுத்தப்படுத்துதல் மற்றும் புணரமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்த நிதி அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த அனர்த்தம் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் லெவின் சமூகத்திற்கு மிகவும் இடையூறு விளைவித்துள்ளது என்பதை நான் அறிவேன். மேலும் சமூக மேம்பாடு மற்றும் முதன்மை தொழில்துறை அமைச்சகங்களில் இருந்து மற்ற ஆதரவு கிடைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.