தெற்கு டன்னீடனில் இன்று பிற்பகல் இரண்டு கார்களும் பேருந்தும் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மதியம் 1.45 மணிக்குப் பின்னர் இடம்பெற்ற குறித்த விபத்தை அடுத்து Hillside சாலைக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

சம்பவத்தை தொடர்ந்து இருவர் காயமடைந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் பேருந்தில் பயணித்தவர்கள் இல்லை.

இந்நிலையில் சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.