உலக தேனீக்கள் தினமான இன்று, தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு தேனீக்கள் செய்யும் சேவை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.

சுறுசுறுப்பு, தேடல், கூட்டு முயற்சி என தன்னுடைய வாழ்க்கைமுறையின் மூலம் மனிதர்களுக்கு பாடம் சொல்கின்றன தேனீக்கள்.

தேனீக்கள் ஆண்டுக்கு 1 இலட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக பூக்களில் இருந்து அவை தேனை எடுக்கின்றன.

ஆனால் அதன் மூலம் அதிகம் பயனடைவது மனிதகுலம்தான்.

தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபா அளவிற்கு வருவாய் ஈட்டுகின்றன.

அது மருத்துவப்
பூக்களிலிருந்து தேனை எடுக்கும் நேரத்தில் அவற்றின் காலில் ஒட்டிக் கொள்ளும் மகரந்தம், வெவ்வேறு பூக்களில் அவை மாறி மாறி அமரும் போது பரவுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது.

இதன் மூலம் கனிகள் உருவாகி வித்துக்கள் பெருகி தாவரங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.

அந்த வகையில் தேனீ பசுமையின் பாதுகாவலனாகத் திகழ்கிறது.

இத்தகைய தேனீக்கள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக மாறி விட்டன.அதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகள் , செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள இரசாயனப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத் திறனை குறைத்து விடும்.

இதனால் தேன்
சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்து போய்
அலைந்து திரிந்து இறுதியில் இறந்து விடுகிறது.

இவ்வாறு தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. அப்படி அழிந்து வரும் தேனிக்களைப் பாதுகாக்கவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகம் முழுவதும் இன்றைய தினம் ‘உலக தேனீக்கள் தினம்’ கொண்டாடப் படுகிறது.

உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுவது தேன்.

ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டும்தான் இருக்கும். அது வருடத்துக்கு 5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை முட்டைகள் இடும்

பல்வேறு உயிரினங்களில் தலைவனாக இருப்பது ஆண்கள்தான்.

ஆனால் தேனிக்களுக்கு ராணித் தேனீதான் அதாவது பெண் தேனீ தான் தலைமை.

பார்ப்பதற்குக் கூட ஆண் தேனீயை விட ராணித் தேனீ பெரியதாகவே இருக்கும்.

ஏனைய உயிரினங்களைவிட கூர்மையான ஞாபகசக்தியைக் கொண்டவை தேனீக்கள்.

உலகம் முழுவதும் தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டன.

அதாவது, தேனீக்களின் அழிவு 42% அதிகரித்திருக்கிறது.

தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது செயற்கை உரம், பூச்சிகொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவை.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரதம் தேனீக்களிடம் சமிபாட்டுக் கோளாறுகளை உண்டாக்குவதால் தேனீக்கள் இறந்து விடுகின்றன.

தேனீக்களை அழிக்காமலே தேன் எடுக்கும் எத்தனையோ நவீன முறைகள் வந்து விட்டன.

ஆனாலும், நெருப்பு மூட்டித் தேன் எடுக்கும் பழங்கால முறையையே இன்றைக்கும் பலர் பின்பற்றி வருவது தேனீக்கள் அழிய ஒரு காரணமாக இருக்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன.சில நாடுகளில் வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து வயல்களில் மகரந்தச் சேர்க்கை உண்டாக்கவும் முயல்கிறார்கள்.

தேனீக்கள் மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன.

நம் வாழ்வின் உணவு உற்பத்திக்குப் பெரும்பங்கு வகிப்பதுடன் நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவற்றின் பயன்பாடுகளை முடிந்தளவு குறைக்கலாம்.

உலகில் தேனீக்கள் இல்லையென்றால், நான்கு வருடத்தில் மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் -என்று விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது நம் அனைவரின் மனதிலும் நிலை கொள்ளட்டும்.