West Coast இல் லூயிஸ் பாஸில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலை 7 மூடப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புல்லர் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. 

இதன் விளைவாக, ஹன்மர் ஸ்பிரிங்ஸ் டர்னாஃப் மற்றும் ஸ்பிரிங்ஸ் சந்திப்புக்கு இடையில் மாநில நெடுஞ்சாலை 7 மூடப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில், விபத்தில் ஆறு பேர் காயமடைந்ததாக St John ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்தது.

இரண்டு ஆம்புலன்ஸ்கள் சம்பவ‌ இடத்திலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தன.

இந்த விபத்தில், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு மூன்று மீட்பு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்ட நிலையில், விபத்தில் காயமடைந்த இருவரை கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒன்று மட்டுமே பயன்படுத்தப்பட்டது.