ஆக்லாந்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு Blockhouse Bay இல் உள்ள ஒரு பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

மதியம் 1.15 மணியளவில் எக்ஸ்மின்ஸ்டர் தெருவில் உள்ள ஒரு முகவரியில் பலத்த சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

சிறிது நேரத்தில் ஒரு நபர் தனது காலில் காயங்களுடன் Avondale மருத்துவ மையத்திற்கு வந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.