Wairarapa, கேப் பாலிசர் வீதிக்கு ( Cape Palliser Road) அப்பால் உள்ள கடலில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

63 வயதான அவர் மற்றொரு நபருடன் சிறிய படகில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் அந்த நபரை காப்பற்ற முடியவில்லை.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காவல்துறை தனது இரங்கலைத் தெரிவிக்கிறது.

மரண வழக்கு விசாரணை அதிகாரி சார்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.