கிஸ்போர்னில் உள்ள Awapuni இல் பணியிட சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்டான்லி சாலையில் (Stanley Road) உள்ள ஒரு முகவரிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

மேலும் இந்த மரணம் தொடர்பில் WorkSafe இற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பில் வேறு எந்த தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை.