கேன்டர்பரியின் (Canterbury) லூயிஸ் பாஸ் சாலையில் (Lewis Pass Road) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மாக்டலன் பள்ளத்தாக்கு சாலைக்கு அருகில் உள்ள மாநில நெடுஞ்சாலை 7 இல் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து விபத்துக்கான சூழ்நிலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.