Northland பொலிசார் வாங்கரேயின் ஒரு வீட்டில் மேற்கொண்ட அதிரடி சோதனைக்குப் பிறகு 200 ஆயிரம் டொலர்கள் மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை மீட்டுள்ளனர்.

இந்த தேடுதலில் ஐந்து துப்பாக்கிகள், மெத்தம்பெட்டமைன் மற்றும் இரண்டு ஜெட்-ஸ்கிஸ் உட்பட திருடப்பட்ட வாகனங்கள் பலவற்றை கண்டுபிடித்ததாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் கெவன் வெர்ரி கூறினார்.

விசாரணையின் விளைவாக  கும்பல் தொடர்புகளுடன் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவர் மீது Whanganui மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சப்ளைக்காக மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்தது, சப்ளைக்காக கஞ்சா வைத்திருந்தது, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்தது மற்றும் பல சொத்துக்களைப் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அந்த நபர் எதிர்கொள்ள நேரிடும்.

விசாரணை நடந்து வருவதாகவும் மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் வெர்ரி கூறினார்.