இன்று நியூசிலாந்தில் 11,063 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது என டாக்டர் ப்ளூம்ஃபீல்ட் கூறினார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 516 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 23 பேர் உட்பட 622 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 47 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.