நியூசிலாந்து சாலைகளில் நேற்றைய தினம் ஒரு கொடிய சனிக்கிழமை ஆகும்.

நேற்று இடம்பெற்ற இரு வெவ்வேறு  விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் Far North இல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரவு 11 மணியளவில் Paparore சாலையில் இடம்பெற்ற குறித்த விபத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் மற்ற மூவருக்கு மிதமான காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்தை தீவிர விபத்து பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் Kaitaia-Awaroa சாலையில் நேற்று நடந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று காலை 10.30 மணியளவில் ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் அவசர சிகிச்சைப் பிரிவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.