உயிருக்கு ஆபத்தான  காயங்களுடன் நபர் ஒருவர் ஒரு பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து, கிஸ்போர்ன் (Gisborne) காவல்துறை ஒரு நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

மார்ச் 1 ஆம் திகதி அன்று மஹியாவில் (Mahia) உள்ள ஒரு பள்ளத்தில் 47 வயதான ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்குப் பிறகு, 27 வயதான ஹாக்ஸ் பேவை சேர்ந்த நபர் மீது இன்று கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஏப்ரல் 9 ஆம் திகதி ஹேஸ்டிங்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

"இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் கைதுகள் இடம்பெறலாம்" என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு, 220302/3743 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கிஸ்போர்ன் காவல் நிலையத்தில் உள்ள துப்பறியும் சார்ஜென்ட் எரிக் ஹன்டருக்கும் நேரடியாக தகவல்களை வழங்கலாம்.