ஹமில்டன் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து St Paul's கல்லூரி மாலை 3.30 மணியளவில் சிறிது நேரம் பூட்டப்பட்டது.

இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வைகாடோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

St Paul's கல்லூரியின் தலைமை ஆசிரியர் Ben Skeen சம்பவத்திற்குப் பிறகு மற்ற மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்.