இன்று நியூசிலாந்தில் 9906 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 466 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தொற்றுகளில் ஆக்லாந்தில் 1804 பேரும், நோர்த்லேண்டில் 492 பேரும், வைகாடோவில் 833 பேரும், Bay of Plenty இல் 442 பேரும், Lakes இல் 217 பேரும், Hawke's Bay இல் 434 பேரும், Mid Central இல் 531 பேரும், Whanganui இல் 257 பேரும், தரணகியில் 317 பேரும், Tairawhiti இல் 108 பேரும், Wairarapa வில் 91 பேரும், Capital and Coast இல் 670 பேரும், Hutt Valley வில் 331 பேரும், Nelson Marlborough வில் 374 பேரும், Canterbury இல் 1628 பேரும், South Canterbury 182 பேரும், தெற்கில் 1110, West coast இல் 82 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 17 பேர் உட்பட 626 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 69 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 750,385 ஆகும்.