ஆக்லாந்தில் மது‌ போதையில் பெண் ஒருவர் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி பாதசாரிகள் மீது மோதியதில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த மாதம், மானுகாவ் வெஸ்ட்ஃபீல்டில் (Manukau Westfield) எற்பட்ட இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்ததையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக 34 வயது பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மார்ச் 20 அன்று நடந்த குறித்த விபத்தில் ஆறு பேர் படுகாயங்களுடன் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியதாக குற்றத்திற்காக அந்த பெண் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ​​மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு அறிக்கையில், துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கெவின் டைர்னன், 59 வயதான Manurewa வை சேர்ந்த நபரான கேரி கோவ்லி விபத்தில் பலத்த காயங்களுக்கு ஆளானதால் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார் என  உறுதிப்படுத்தினார்.

சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த மற்றொரு நபர் நிலையான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக டைர்னன் கூறினார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படும் பெண் ஓட்டுனர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியமை மற்றும் அதிகப்படியான மது அருந்தி மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பெண் மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஏப்ரல் 12ஆம் திகதி ஆஜராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.