மிட் சென்ட்ரல் ஹெல்த் போர்ட் தலைமை நிர்வாகி கேத்ரின் குக், ஏழு ஆண்டுகள் பணியாற்றி அந்தப் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.

இவர் தனது குடும்பத்துடன் இங்கேயும் ஆஸ்திரேலியாவிலும் அதிக நேரத்தை செலவிட ஜூன் மாத இறுதியில் புறப்படுகிறார்.

மூன்று முன்னணி சுகாதார அமைச்சக அதிகாரிகளான சுகாதார இயக்குனர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட், பொது சுகாதார இயக்குனர் கரோலின் மெக்எல்னே மற்றும் நிகி ஸ்டெபனோஜியானிஸ் நேற்றைய தினம் தங்கள் இராஜினாமாவை அறிவித்தனர்.

இன்று ப்ளூம்ஃபீல்ட் மற்றும் கரோலின் மெக்எல்னே இருவரும் இணைந்து இறுதி செய்தியாளர் சந்திப்பை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.