தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்காக சுகாதார அமைச்சு சுமார் 1 பில்லியன் ரூபா கடனைச் செலுத்த வேண்டி யுள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சுகாதார அமைச்சுக்கான மருத்துவப் பொருட்களை வழங்குவதை நிறுத்துவதற்கு நிறுவனங்கள் தீர்மானித்துள்ள தாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக ஆய்வுகூட சோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

ஆய்வுகூட  சோதனைகளுக்கு பதில் கிடைக் காததால் ஏற்கனவே சில சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலை இருந்த போதிலும் சுகாதார அமைச்சு சில மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.