கடந்த 48 வருடங்களாக ஒப்பற்ற சீரிய பணியாற்றி வரும் 'தமிழ்நாடு அறக்கட்டளை' TNF-Tamilnadu Foundation 48.

இவ்வருடம் எக்குறைகள் இல்லாது பிறக்க வேண்டுமோ, அக்குறைகளுடன் பிறந்து உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள ஏழை எளிய மாணவ,மாணவியருக்கு உதவ இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள அக்குழந்தைகளுக்கான பள்ளிகளுக்கு நிதியுதவி திரட்டி கொடுக்கவிருக்கிறார்கள். 

TNF 48 இன் கல்வி முயற்சியான "ABC திட்டம்" மிக அருமையான ஒன்று. இது ஆறாம் வகுப்பிலிருந்து அவர்களின் விருப்பமான கல்லூரிப் படிப்பு வரை நிதிஉதவும் திட்டம்.

இந்த ஏபிசி திட்டத்தை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள ஒரே வெளி நிறுவனம் TNF மட்டுமே.

தமிழ்நாட்டின் ஏழ்மையான குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உதவ விரும்பினால் ஏபிசி திட்டத்தை, வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும்,வேலை நேரங்களிலும் முறையாக செயல்படும் இதனை தாராளமாக அணுகலாம். 

மண் வாசனை (மாவட்ட அறக்கட்டளை நிதி) 

மண் வாசனை” என்பது 1974 இல் TNF உருவானதில் இருந்து மிகப்பெரிய நிதி திரட்டல் மற்றும் மூலதனத் திட்டமாகும்.

இந்த நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி மட்டுமே அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் TNF இன் கல்வி (ABC திட்டங்கள்) மற்றும் மனிதாபிமான திட்டங்களை விரிவுபடுத்தவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும்.

2018 ஆம் ஆண்டில் TNF வாரியத்தால் தொடங்கப்பட்ட “மண் வாசனை” முயற்சியின் குறிக்கோள், TNF ன் இந்நற்காரியங்கள் எவ்வித தடங்கலும் இன்றி மாநிலம் முழுவதும் தொடர்ந்து இருப்பதற்காக 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட TNF USA வாரியம் வழங்கும் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதாகும்.

ஏபிசி திட்டமானது: 

தாழ்த்தப்பட்ட கிராமப்புற மாணவர்களின் தர அளவிலான தேர்ச்சியை மேம்படுத்துவதாகும். இந்த முன்னெடுப்பின் செயல்கள் திறம்பட இருந்ததன் அடிப்படையில்,TNF ஏற்றுக்கொள்ளப்பட்ட பள்ளிகளில், கல்வி ரீதியாக சவாலானவர்கள் முதல் அதிக லட்சியம் கொண்ட மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ABC திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 89 அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏபிசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 47,147 மாணவர்களை வளப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் பின்பற்றக்கூடிய ஒரு தனித்துவமான, நிலையான மற்றும் செலவு குறைந்த மாநில அளவிலான முயற்சியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

“TNF 48 தேசிய மாநாட்டு விழா”

"வறியார்க்கொன்று ஈவதே ஈகை" எனும் திருக்குறளின்படி இதனை மேலும் சுவாரசியமாக நடத்தி அனைவரையும் மகிழ்விக்கவும் நிறைய திட்டங்கள் நடந்து வருகின்றது. அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய நிகழ்ச்சிகளுடன் அதே நேரம் இச்சேவைக்கு வேண்டிய நிதியின் இலக்கை அடைய பணம் திரட்ட வேண்டிய நோக்குடனும் செயல்பட்டு வருகின்றனர்.

அதற்காக பலரும் உழைத்து வருகின்றனர். ஒவ்வொரு அமைப்பிலும் சிறு குழுக்களாக இணைந்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.அதற்கான ஓர் சிறப்பு நிகழ்வுகள் “TNF 48 தேசிய மாநாட்டு விழா", வரும் மே மாதம் 27,28 மற்றும் 29 தேதிகளில் டல்லாஸில் நடக்க உள்ளது. 

அந்த மூன்று நாட்கள்....

மே 27-வெள்ளிக்கிழமை:

ATEA -American Tamil Entrepreneurs Association அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம், இவர்கள் TNF உடன் இணைந்து டல்லாஸில் ஓர் புதிய அத்தியாயம்/தொடக்கத்தை அமைக்கப்போகிறார்கள். சிறு தொழில்,பெரும் தொழில் என தொழில் முனைவோர் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

மே 28-சனிக்கிழமை: 

தமிழ்நாடு அறக்கட்டளையின் செயல்பாடுகளைத் துவக்க முதலில் குத்துவிளக்கேற்றி துவங்கப்படும். பின் திருமதி சுதா ரகுநாதனின் இசை கச்சேரி. அதனைத் தொடர்ந்து பரதநாட்டியம் மற்றும் அனைத்து கலைநிகழ்ச்சிகளும் ஆரம்பம். தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்டம்,மயிலாட்டம்,பாம்பாட்டம்,கரகாட்டம்,காவடி போன்ற எட்டு விதமான நடனங்கள் நடைபெற இருக்கிறது. பின்னர் அறக்கட்டளையின் நிர்வாக குழுவின் அறிக்கை விவரங்கள் அறிவிக்கப்படும். தொடர்ந்து நாடகம்,டல்லாஸின் தமிழ்ப்பள்ளிகளின் குழந்தைகளின் நடனங்கள் என குதூகலமான பல நிகழ்வுகள் நடைபெறும். மாலையில் 'இயக்கம்' நடனக் குழுவினரின் அற்புதமான நிகழ்ச்சி உள்ளது. இது பிராட்வே ஸ்டைலில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி. அன்றின் மற்றொரு சிறப்பு- அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் 'மகாபலிபுரம்' கலைக்கோவில் பற்றிய சிறப்புகளை அக்குழுவினர் பேச உள்ளனர்.

மே 29 -ஞாயிறு:

இன்று இம்மாநாட்டின் நோக்கமும்,வரவு-செலவுகள் பற்றிய பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும். பின் தமிழ்ச்சங்கத்தின் சிலம்பம்,பறையும்-பரதமும்,தமிழ் கலைகள் கொண்ட நிகழ்வும், தொடர்ந்து 'நீயா-நானா' புகழ் கோபிநாத்தின் நிகழ்வு. திரு.ஞானசம்பந்தம் ஐயா அவர்களின் தலைமையில் ஓர் நிகழ்வு, தொடர்ந்து ஓர் மிகப்பெரிய அணிவகுப்பு நடைபெற உள்ளது.அதில் பாரம்பரிய கலைகளும்,கும்மியும் உண்டு. இரவு பாடகி சித்ரா,சத்யப்ரகாஷ் பங்கேற்கும் லைட் மியூசிக். இசை இரவோடும் விருந்தோடும் இம்மூன்று நாட்கள் நிகழ்வுகள் நிறைவுபெறும். 

இதன் அனைத்து விவரங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் வலைத்தளத்தில் சென்று அறியலாம்.  

->https://convention.tnfusa.org/

மேலும் இதனைப் படிக்கும் நல்லுள்ளங்களான தாங்களும் ஈகையின் அர்த்தத்தை தங்கள் நிதியுதவியுடன் காட்ட TNF  இன் வலைதளத்தில் விவரங்கள் உள்ளன. காணலாம்.