ரஷ்யாவை மிரட்டி, உருட்டி பணிய வைக்க அமெரிக்கா நினைத்தால், அந்த நாட்டை மட்டுமல்ல எங்களது அத்தனை எதிரிகளையும் உருத்தெரியாமல் அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்களது எதிரிகளை அவர்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் தொடர்ந்து அமெரிக்கா தனக்கு எதிராக அணி திரட்டி வருவதை குறிப்பிட்டு இவ்வாறு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் முக்கிய உதவியாளரும், முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெத்வதேவ் கூறுகையில் அமெரிக்கா தலைமையிலான அத்தனை எதிரிகளையும் ஒட்டுமொத்தமாக சந்திக்க நாங்கள் தயார்.

அவர்கள் இருக்க வேண்டிய இடத்தை அவர்களுக்கு காட்டத் தயங்க மாட்டோம். ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பயம் இப்போது அலறலாக மாறியுள்ளது

ரஷ்யாவை மிரட்டி உருட்டி மண்டியிட வைக்க முயல்கிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். உருத்தெரியாமல் ஆக்கி விடுவோம் என்று மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.