அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள அரசமருத்துவ உத்தியோகத்தர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலார இதன் காரணமாக சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாத நிலை காணப்படுகின்றது சுகாதார பணியாளர்களும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவை என அறிவித்துள்ள போதிலும் எரிபொருள் தட்டு;ப்பாட்டின் மத்தியில் அம்புலன்ஸ்களிற்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான  பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படவில்லை அம்புலனஸ்களும் ஏனைய வாகனங்களுடன் நீண்ட வரிசையி;ல் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிற்கு மாற்றும் நடவடிக்கை அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது என  அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

சுகாதார பணியாளர்கள் வேறுவேறு நேரங்களில் பணிபுரிவது வழமை அவர்கள் தனியார் போக்குவரத்து சேவையையே பின்பற்றுவார்கள், எரிபொருள் பற்றாக்குறையும் கட்டண அதிகரிப்புகளும் அவர்களை பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.