இன்று நியூசிலாந்தில் 14,494 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 08 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த மரணங்கள் ஆக்லாந்து பிராந்தியம், வைகாடோ மற்றும் Lakes இல் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 4509 பேரும், நோர்த்லேண்டில் 440 பேரும், வைகாடோவில் 1420 பேரும், Bay of Plenty இல் 931 பேரும், Lakes இல் 394 பேரும், Hawke's Bay இல் 597 பேரும், Mid Central இல் 472 பேரும்,  Whanganui இல் 137 பேரும், தரணகியில் 355 பேரும், Tairawhiti இல் 289 பேரும், Wairarapa வில் 105 பேரும், Capital and Coast இல் 1141 பேரும், Hutt Valley வில் 845 பேரும், Nelson Marlborough வில் 376 பேரும், Canterbury இல் 1664 பேரும், South Canterbury 93 பேரும், தெற்கில் 703 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 18 பேர் உட்பட 896 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 22 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 361,108 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 162 முதல் டோஸ்கள், 454 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 7689 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 1040 முதல் டோஸ் மற்றும் 861 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.