எதிர்காலத்தில் உருவாகவுள்ள தேசிய அரசாங்கம் ஆபத்தான அரசியல் நடவடிக்கையாக – ஆபத்தான அரசியல் சூதாட்டமாக  மாறலாம் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு அவரின் நெருங்கிய சகாக்கள் எச்சரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சமூகத்தின் ஆதரவு குறித்த துல்லியமான தகவல்கள்-தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய முழுமையான உடன்படிக்கை –ஒரு தேசிய அரசாங்கத்தின் பொறுப்புகளை பிரித்தல் மற்றும் தேசிய அரசாங்கம் குறித்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான பொறிமுறை குறித்து முழுமையான உடன்பாடு போன்றவை இல்லாதபட்சத்தில்  ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய அரசாங்கத்திற்கான முயற்சிகளின் அடிப்படையில் பார்க்கும்போது இது மிகவும் ஆபத்தான முயற்சியாக அமையும் எனவும் அவர்கள் முன்னாள் பிரதமருக்கு தெரிவித்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் - அந்த முயற்சிகளில் ஈடுபட்டு;ள்ளவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தானதாக மாறலாம் எனவும் முன்னாள் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.