எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய  ரிசேர்வ்வங்கி அனுமதியளித்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி  வங்கி ( எக்சிம் வங்கி) 2022 பெப்ரவரி இரண்டாம் திகதி  இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை செய்துகொண்டுள்ளது என இந்திய ரிசேர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவிடமிருந்து பெட்ரோலிய உற்பத்திபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கியுள்ள 500 மில்லியன் டொலர் கடனுதவி கிடைக்கச் செய்வதற்காகவே இந்த உடன்படிக்கையை எக்சிம் வங்கி செய்துகொண்டுள்ளது என ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75 வீதம்பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் மீதமுள்ள 25 வீதம்இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளிடமிருந்து கொள்வனவுகளை மேற்கொள்ளப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.