இன்று நியூசிலாந்தில் 20,989 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆக்லாந்தில் ஐந்து பேர், வைகாடோவில் ஒருவர் மற்றும் தெற்கு பிராந்தியத்தில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 7240 பேரும், நோர்த்லேண்டில் 765 பேரும், வைகாடோவில் 1941 பேரும், Bay of Plenty இல் 1352 பேரும், Lakes இல் 510 பேரும், Hawke's Bay இல் 855 பேரும், Mid Central இல் 682 பேரும்,  Whanganui இல் 188 பேரும், தரணகியில் 519 பேரும், Tairawhiti இல் 330 பேரும், Wairarapa வில் 174 பேரும், Capital and Coast இல் 1746 பேரும், Hutt Valley வில் 1044 பேரும், Nelson Marlborough வில் 443 பேரும், Canterbury இல் 2160 பேரும், South Canterbury 136 பேரும், தெற்கில் 878 பேரும், West coast இல் 22 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 20 பேர் உட்பட 856 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 23 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 327,925 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 213 முதல் டோஸ்கள், 748 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 7863 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 686 முதல் டோஸ் மற்றும் 299 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.