உக்ரைனின் குண்டுசெயல் இழக்கச்செய்யும் பிரிவை சேர்ந்த இருவர் தங்கள் கரங்களையும் ஒரு போத்தல் நீரையும் பயன்படுத்தி பாரியகுண்டொன்றை செயல் இழக்கச்செய்வதை காண்பிக்கும் வீடியோவை வைரலாகியுள்ளது.

உக்ரைனிலிருந்து வெளியாகியுள்ள 33 செகன்ட் வீடியோவை இதுவரை இரண்டு மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

வெடிகுண்டின் ஒரு பக்கத்தில் நபர் ஒருவர் நீரை ஊற்றுவதையும் அதன் மூடப்பட்டுள்ள பகுதியை ஒருவர் அகற்றுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

ஒரு போத்தல் தண்ணீர் ஒருசோடி கையுறைகள் ஆகியவற்றை பயன்படுத்தி- தலைக்கவசம் இல்லாத அந்த நபர்கள் குண்டை செயல் இழக்க செய்கின்றனர்.

நீர் உராய்வை குறைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெடிகுண்டை செயல் இழக்க தேவையானது வெப்பத்தை – உராய்வை- அதிர்ச்சியை தணிப்பது மாத்திரமே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கை சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதம் குறித்த கற்கை நெறிகளிற்கான நிறுவகத்தின் இயக்குநர் சார்லெஸ் லிஸ்டெர் இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இருவரும் மனதை கவரும் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வீசிய குண்டு கட்டிடமொன்றை தரைமட்டமாக்க கூடியது ஆனால் எனினும் உக்ரைனின் குண்டை செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் இரண்டு கைகள் ஒரு போத்தல் தண்ணீரை பயன்படுத்தி அதனை செயல் இழக்கச்செய்துள்ளனர்.

எறிகணைகள் அருகில் விழுந்து வெடித்துக்கொண்டிருக்கும் போதே இதனை செய்துள்ளனர் என அவர் பதிவிட்டுள்ளார்.