நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் நேட்டோ, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்தார்.

எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவிரும்ப வில்லை என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க NATO நாடுகளில் உக்ரைன் இணைய இருப்பது ஒரு காரணம் என கூறப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் NATO நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை.

ரஷ்ய அதிபர் புதின் இப்பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.